நாட்டின் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
Saturday, September 18th, 2021
நாட்டில் நேற்றுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரை 89 இலட்சத்து 73 ஆயிரத்து 670 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி 9 இலட்சத்து 49 ஆயிரத்து 105 பேருக்கும், மொடர்னா தடுப்பூசி 7 இலட்சத்து 58 ஆயிரத்து 282 பேருக்கும், பைஸர் தடுப்பூசி 2 இலட்சத்து 4 ஆயிரத்து ,685 பேருக்கும், ஸ்புட்னிக் வி 43 ஆிரத்து 453 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டில் 109 இலட்சத்து 68 ஆயிரத்து 195 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கேந்திர மையமாக மாற்றப்படவுள்ள இலங்கை !
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்...
இலங்கையிலும் 188 அதிகரித்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை - மன்னாரில் முடக்கப்பட்டது தாராபுரம் கிராமம்!
|
|
|


