நாட்டின் வாகன விபத்துக்களால் நாள் ஒன்றுக்கு 7பேர் உயிரிழப்பு!

Wednesday, November 23rd, 2016

ஒரு நளைக்கு வாகன விபத்துகளால் மாத்திரம் ஏழு பேர் உயிர் இழப்பதோடு, 30 பேர் படு காயங்களுக்கும், 100 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாவதாக காவற்துறையின் போக்குவரத்து விபத்து பிரிவுத் தலைவர் கே.எ. கித்சிறி குமார தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால போரினால் உயிர் இழந்தவர்களை விட வாகன விபததுக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிமாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.  இதே வேளை மேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலை வேன் சாரதிகளும் தங்கள் கண்களை நவம்பர் முதல் வாரத்தில் இருந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மேற்கொண்ட இதே போன்ற சோதனைகளின் போது , பலருக்கு கண்புரை மற்றும் ஏனை கண் நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது என சுகாதார சேவைகள் பொது பணிப்பளர் கலாநிதி பாலித மஹிபால தெரிவித்துள்ளார். வாகன விபத்தின் போது அதிக இரத்த போக்கு காரணமாகவே அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதம தாதியல் அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் வைத்தியசாலைக்கு கொண்டுவந்தால் அவர்களின் இறப்புக்களை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், முச்சக்கர வண்டிகள், சம்பந்தப்பட்ட விபத்துக்களின் மூலம் 326 பேர் உயிர் இழந்துள்ளனர் இதற்கிடையில், தேசிய சாலை பாதுகாப்புச் சபை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வாகன அனுமதி பத்திரம் பெரும் வயதெல்லையை 18 இலிருந்து 25 ஆக உயர்த்தியுள்ளது. தற்போது நாட்டில் 1.1 மில்லியன் முச்சக்கர வண்டி பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

201503220448526180_Dindigul-in-the-accident-including-the-woman-caught-in-the_SECVPF-720x480

Related posts: