இலங்கையில் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் – பொதுநலவாய அமைப்பு வலியுறுத்து!

Friday, July 15th, 2022

பொதுநலவாய சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி ஜனநாயக ஆட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு பொதுநலவாய செயலகத்தின் அர்ப்பணிப்பையும் செயலாளர் நாயகம் மீண்டும் வலியுறுத்தினார்.

எனவே அமைதியான மாற்றத்தை நோக்கி இலங்கையிலுள்ள அனைவரையும் நிதானத்துடன் செயற்படுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும் நவீன பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராகவும் இலங்கை எப்போதும் மக்களால் போற்றப்படுகிறது.

ஆகவே ஜனநாயகக் கோட்பாடுகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க தலைமைப் பதவியில் உள்ள அனைவரையும் தாம் அழைப்பதாக பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை மக்களின் ஆட்சி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான கரிசனைகள் நிவர்த்தி செய்யப்படுவது மிகவும் முக்கியமானது.

இந்த நோக்கத்திற்காக தொடர்ந்து உரையாடல்களை மேற்கொள்ளுமாறும் பொருளாதாரத் தேவைக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: