நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி – மத்திய வங்கியின் ஆளுநர்!

கடந்த ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் தெளிவான வளர்ச்சி இடம்பெற்றிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித்குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்க மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக நிதி நிறுவனங்களின்எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமையாகும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு அதற்கான வசதிகளை வழங்குவது இலக்காகும்.
கடன் பெறுவதை இலகுவாக்குமாறும் நுண்கடன் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் முறைமையைஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி வலியுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அன்னதான சமையலில் ஈடுபடுவோருக்கு மருத்துவச்சான்றிதழ் அவசியம்!
மத்திய வங்கியின் ஆளுநர் அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு அழைப்பு!
சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை வெற்றியளித்துள்ளது – சுற்றுலாத்துறை மகிழ்ச்சி தெரிவிப்பு!
|
|