நாட்டின் புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் குறித்து அவதானம் செலுத்தி நடவடிக்கை முன்னெடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அரச தலைவர் உத்தரவு!

Tuesday, November 2nd, 2021

நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் குறித்து அவதானம் செலுத்தி திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ், விமானப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நிரந்தர போக்குவரத்து திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் ட்ரோன் கெமராக்கள் இயக்கப்பட்டு, வரும் வாரத்தில் சிறப்பு ஆய்வு நடத்தப்படும். எந்தெந்த பகுதிகளில் நெரிசல் ஏற்படுகின்றது? காரணங்கள் என்ன? என்று முதலில் ஒரு ஆய்வு நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அந்த ஆய்வின் பின்னர் எதிர்காலத்தில் கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான நிரந்தர போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே ட்ரோன் கெமரா இயக்கத்தின் நோக்கமாகும்.

மக்கள் நகருக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வசதி செய்தல் போன்ற அனைத்து வசதிகளும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: