நாட்டின் பல பாகங்களில் நாளை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றையதினம், அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்காரணமாக வேலை செய்யும் இடங்களில் போதுமான அளவு நீர் அருந்துவதும், பொதுமக்கள் முடியுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பதும் சிறந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியோர்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தொடர்ந்தும், வீட்டிலேயே இருக்குமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
இங்கிலாந்து கடலில் மூழ்கி இலங்கை தமிழர்கள் 5 பேர் பலி!
சகல எம்.பி. களினதும் சொத்துக்களை ஆவணப்படுத்த நடவடிக்கை!
உறவுகள் எங்கே? வடக்கில் பேரணி!
|
|