நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, December 11th, 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்படி பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரங்கள் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை: இறைமைக்கு பாதிப்...
இலங்கையில் இராணுவ ஆட்சி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் க...
பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக் கொள்வதே ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு காரணம் -...