நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அதிகூடிய வெப்பநிலை – எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மனித உடலால் உணரக்கூடிய, அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் தென், சபரகமுவ மாகாணங்களிலும்; அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக பொதுமக்கள் இடைக்கிடையே நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியானது!
பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு பேக்கரி உரிமையாளர்கள் - பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!
தொடர் மழை - கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு - இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் உயர்வு!
|
|