நாட்டின் பல இடங்களில் மழையுடனான காலநிலை!

Monday, March 8th, 2021

மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையிலும் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 000

Related posts:

கொள்கை ரீதியில் நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை - நிதி இராஜாங்க அமைச்சர்...
தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை - தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு அறிவிப்பு...
மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க யோசனை - அமைச்சர் நி...