நாட்டின் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சிகாரணமாக நுரைச்சோலையில் மின்னுற்பத்தி அதிகரிப்பு!

Saturday, January 28th, 2017

நீர் மின்சாரம் 11 வீதம் வரை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், இதன் காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் கூறியுள்ளது.

அதன்படி மொத்த மின் பயன்பாட்டில் 52 வீதமானவை நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து வழங்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அதுல வண்ணியாரச்சி கூறினார்.

கடந்த தினங்களில் பெய்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்யும் நீர் தேக்கங்களின் நீர் மட்டங்களில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படவில்லை என்றும் மின் உற்பத்தி செய்யும் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் 33% வரை குறைவடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நீர் மட்டம் 20% வரை குறைவடைந்தால் நீர் மின் உற்பத்தி செய்வதில் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும், இதன்காரணமாக பெப்ரவரி முதல் வாரமளவில் 60 மெகாவோல்ட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அதுல வண்ணியாரச்சி கூறினார்.

தொடர்ச்சியாக மின் உற்பத்தி செய்யும் நீர் தேக்கங்களுக்கு நீர் கிடைக்காவிட்டால் மார்ச் மாதம் ஆகும் போது, மின் உற்பத்தியில் நெருக்கடி ஏற்படும் என்று அவர் மேலும் கூறினார்.

lakwijaya_power-plant

Related posts:

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க...
முக்கொம்பான் ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை - பொன்னாலை - முக்கொம்பான் பேருந்த...
நாட்டின் நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினம் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும...