நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Saturday, December 23rd, 2023
நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேநேரம், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மழை வீழ்ச்சியில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை
யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையுடன் கூடிய காலநிலையால் 46 ஏக்கர் பரப்பளவு நெற்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேலணை பிரதேச செயலர் பிரிவில் 7.04 ஏக்கர் நெற் செய்கையும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 3.325 ஏக்கர் நெற்செய்கையும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 18.75 ஏக்கர் நெற்செய்கையும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 17 ஏக்கர் நெற்செய்கையும் இவ்வாறு அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


