நாட்டின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
Wednesday, February 10th, 2021
அடுத்த மாதளவில் இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொவிஷீல்ட் எஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை தொடர்பாக அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் ஊடாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கும் கொவிஷீல்ட் எஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்
இது தொடர்பான கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியில் வைத்து விடத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


