நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததைத் தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடத்தின் முதற்பாதியில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் 228 கோடி டொலராக இருந்ததுடன், இந்த வருடம் 235 கோடி டொலர் வரை உயர்ந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இதேவேளை இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஆகக்கூடுதலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் 104 கோடி டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
காணாமல் ஆக்கப்பட்டோர் பணியக ஆணையாளர் பதவிக்கு 95 பேர் விண்ணப்பிப்பு!
சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நீடித்தால் பாரிய விழைவு ஏற்படும் - சுகாதார பிரிவு எச்சரி...
பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் சுதந்திரங்களை மதிக்கவேண்டும் - மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்து!
|
|