நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர் – யூ.ஆர் திட்டம் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Wednesday, July 27th, 2022
நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 299 பெட்ரோலியக் கூட்டுத்தாபன மற்றும் 34 ஐஓசி எரிபொருள் நிலையங்களில் நேற்று கியூ.ஆர் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
இதேவேளை, நேற்றையதினம் மொத்தமாக 92,845 வாகனங்களுக்கு கியூ.ஆர் முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓமந்தை முருகன் ஆலயத்தில் ஐம்பொன் முருகவேல் திருட்டு – தெய்வ விக்கிரகங்கள் உடைத்தெடுப்பு!
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!
நாளை முதல் வானிலையில் மாற்றம்!
|
|
|


