நாடு முழுவதும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரும் களத்தில் – ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!
Thursday, April 23rd, 2020
நாடு முழுவதிலும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாகிய நான் முப்படையினரையும், அறிவித்தலில் குறித்து காட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக இன்றுமுதல் நடைமுறைக்கு வருமாறு இந்த கட்டளை மூலம் அழைக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!
ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் ஒரு எல்லை உள்ளது - ஜனநாயகத்தை மீறினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் ...
தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டு!
|
|
|


