நாடு மீள திறக்கப்பட்டால் பின்பற்றவேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Friday, September 24th, 2021
அடுத்த வாரத்தில் நாடு மீள திறக்கப்பட்டாலும் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக இன்று முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் பின்னர், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கலந்துரையாடலில், நாட்டின் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.6 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
000
Related posts:
MT- New Diamond கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்...
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நேரிடலாம் - இலங்கைக்கு கோதுமையும் வழங்கவும...
யாழ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடத்த தடை -எடுக்கப்பட்டது இறுதித் தீர்மா...
|
|
|


