நாடு திறக்கப்பட்டாலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நீடிக்கும் – இராஜயாங்க அமைச்சர் சுதர்சினி தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021

போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் நீக்கப்பட்டாலும் நோயாளிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடையும்வரை பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போதைய போக்குவரத்துக் கட்டுப்பாடுகளின் பலாபலன்களை அனுபவிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள இராஜயாங்க அமைச்சர் அதுவரை கட்டுப்பாடுகளும் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் குறைவடைவதற்கு இன்னமும் இரண்டு மூன்று வாரங்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவதுறை சார்ந்தவர்களும் இந்த விடயத்தில் தொடர்புபட்ட ஏனையவர்களும் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்தே அரசாங்கம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானித்தது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையைக் கருத்திலெடுத்த பின்னரே போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடையும் வரை பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கப்படாது என சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

எமது பிரதேசத்தை முன்னுதாரணமான பிரதேசமாக மாற்றி அமைக்க ஒன்றுபட்டு உழைப்போம் -  தவிசாளர் கருணாகரகுருமூ...
வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப...
இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!