நாடு திரும்பினர் ஜனாதிபதி !
Thursday, May 16th, 2019
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று (16ஆம் திகதி) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
ஆசிய நாகரிகங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி சீனாவிற்கு சென்றிருந்தார். சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் தலைமையில் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம் மாநாட்டில் 47 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த மாநாட்டின்போது சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் மற்றும் சீன பிரதமர் லீ குவாங்க் உள்ளிட்டோரை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலின் மத்தியில் பாதுகாப்புப் பிரிவினரின் நடவடிக்கைககளுக்காக 260 கோடி ரூபா நன்கொடையை சீனா வழங்கியுள்ளது.
Related posts:
பிரதமர் மோடி தலைமையிலான அரசில் 25 அமைச்சரவை அமைச்சர்கள்?
இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு!
நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு - சுவாச நோயாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து...
|
|
|
அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தாருங்கள் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவனாதனிடம் அக்க...
குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி - நாடு முழுவதும் சமுர்த்தி வங்கிக...
உலகின் சக்திகளிடம் சரணடைய முடியாது - கடன் பொறியிலிருந்து விடுபடுவதற்காக கடன் மறுசீரமைப்பு அடுத்த ஓரி...


