நாடு எந்த வித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை – பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு!

Thursday, July 8th, 2021

நாடு எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

புலனாய்வு தகவல்கள் அடிப்படையில் பார்க்கும் பயங்கரவாதம் தொடர்பான எந்த நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்காவின் பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பயண எச்சரிக்கை கொவிட் தொடர்பானது என்ற போதிலும் ஏற்கனவே காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கையும் அதில் இடம்பெற்றுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: