நாடாளுமன்ற வளாகத்தில் வாராந்தம் எழுமாறான கொவிட் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம் – நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவிப்பு!
Thursday, January 28th, 2021
நாடாளுமன்ற வளாகத்தில் வாராந்தம் எழுமாறாக கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் மற்றும் நடைபெறாத தினங்களிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பரிசோதனையில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற பணிக் குழாமினரும் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விதிகளை மீறும் சாரதிகளுக்கான தண்டப்பணம் தொடர்பாக கவனம் செலுத்த முடிவு!
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு!
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் மார்ச் 15 நிறைவு - சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளத...
|
|
|


