நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்த்தன முன்னிலையில் இந்த சந்தியப்பிரமாணம் இன்றையதினம் இடம்பெற்றது.
அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்புரிமைக்காக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பிராக முன்னர் நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டகொட அண்மையில் பதவி விலகினார்.
அவரது பதவி விலகலை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டவிரோதமாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு - மத்திய வங்...
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே உண்டு - நாமல் ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப...
அஸ்வெசும உதவித் திட்டம் – நாடு முழுவதுமிருந்து 9 இலட்சத்து 68 ஆயிரம் மேன்முறையீடுகள் - இராஜாங்க அமைச...
|
|