நாடாளுமன்றை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று – மூன்றாவது நபராக அமைச்சா் வாசுதேவா நாணயக்காராக்கும் கொரோனா தொற்றுறுதி!
Monday, January 11th, 2021
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவவை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ உறுதிப்படுத்தினார்.
முன்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் மூன்றாவது கொரோனா தொற்றாளராக வாசுதேவ நாணயக்கார அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அலுக்கோசு பதவிக்கு செயன்முறை பயிற்சி - சிறைச்சாலைகள் திணைக்களம்!
புங்குடுதீவுப் பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோர் அச்சமின்றி விபரங்களை தாருங்கள் - யாழ்.அரச அதிபர் அவ...
பல்கலை அனுமதிக்கான விண்ணப்பத்தை நிறுத்துங்கள- கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்க...
|
|
|


