நாடாளுமன்றைக் கூட்ட வேண்டிய அவசியம் கிடையாது – பணத்தை விரயமாக்க வேண்டிய அவசியமும் இல்லை – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020

நாடாளுமன்றைக் மீண்டும் கூட்டி பணத்தை விரயமாக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்கும் பூரண அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கே உண்டு. அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கொரோனா தொற்று பரவுவதனை தடுக்கும் வகையில் விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் பிரச்சாரத்தை முன்னெடுக்க தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்திய போது சிலரின் செயற்பாடுகளை பார்த்தால், கொரோனா பரவுகையினை தவிர்ப்பது சிரமம் என்பதனை நாம் புரிந்து கொண்டோம். வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரிச்சாரத்தை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

கொரியா போன்ற நாட்டில் கொரோனா நோய் தொற்று மிகவும் மோசமான முறையில் தாக்கியது, எனினும் அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இங்கு எதிர்க்கட்சிகள் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது. கொரோனா நோய் தொற்று பரவியதுமுதல் எதிர்க்கட்சியினர் உரிய கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: