நாடாளுமன்றில் விவாதிக்க முடியாமல் போனவை குறித்து சபை முதல்வர்!
Saturday, June 24th, 2017
மருத்துவர்களின் வேலை நிறுத்தம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாமல் போனமை குறித்து சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல விளக்கம் அளித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.இந்த விடயங்களை பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இவற்றை முன்மொழிந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபையில் இருக்காததால் விவாதத்தை நடத்த முடியாமல் போனதென சபை முதல்வர் தொவித்தார். இந்த விடயங்கள் பற்றி விவாதிக்க அரசாங்கம் தயாராகவே உள்ளது. இதற்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாதென குறித்து சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல விளக்கம் அளித்தார்.
Related posts:
வரும் 10ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் வித்தியா கொலை வழக்கு!
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது விசேட சுற்றறிக்கை - மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் - பாடசால...
ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தில் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ...
|
|
|


