நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது – சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவிப்பு!

Thursday, January 27th, 2022

நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். எனினும், நாடாளுமன்றம் மூடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ள போதிலும், அது பாரதூரமான நிலைமையல்ல எனவும் இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது எனவும் சபாநாயகர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மூன்று கோவிட் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் பத்து முதல் பதினைந்து உறுப்பினர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார் - பௌத்த ஆலோசனை சபை தெரி...
ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானம...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!