நாடாளுமன்றம் கலைப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிப்பு!
Sunday, April 28th, 2024
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தை நாளை (29) கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. எவ்வாறாயினும், இந்த விவாதங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைகள் முற்றிலும் தவறானவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இடம்பெற்ற அவசர சந்திப்பின் பின்னணியிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் இந்நாட்டின் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் பல சந்திப்புகள் இடம்பெற்றன.
இதனடிப்படையில், முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு ரீதியாக, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 க்கு இடையில் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


