நாடாளுமன்றத்தை செயலிழக்கச் செய்ய சிலர் முயற்சி – பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!

நாடாளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்..
ஹொரண அங்குவாதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் இந்த கருத்தை வேளியிட்டார். அவ்வாறான தரப்பினருக்கு எதிராக நாட்டு மக்கள் கொள்கையொன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாட்டில் ஜனநாயகம் நிலைகுழைந்து செல்வதாக அம்பலன்கொடயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊழல் மோசடி தொடர்பாக எந்தவொரு தரப்பினருக்கும் தராதரம் பாராது செயற்படுகின்றமையானது முறி பிரச்சினையின் போது ஜனாதிபதியின் பங்களிப்பின் ஊடாக தெரியவருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா தீர்மானம்!
நாளைமுதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம் - புகையிரதத் திணைக்களம் அறிவிப்...
ஆகஸ்ட் மாதம்முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன - பிரதமர் எச்சரிக்கை!
|
|