நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடக்கப்பட்டது புலமைப்பரிசில் பரீட்சை – மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு!

Saturday, January 22nd, 2022

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22-01-2022) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. இந்நிலையில் எவ்வித அச்சமும் இன்றி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்காக சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் இன்றையதினம் பரீட்சைக்கு தோற்றவிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் தமிழ்மொழி மூலம் 85 ஆயிரத்து 445 பரீட்சாத்திகளும், சிங்களமொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 62 பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

சுகாதார தரப்பினர் மற்றும் கல்வி சார் துறையினர் பாதுகாப்பு தரப்பினர் ஆகியோரது நேரடி கண்காணிப்பின் கீழ் யாழ் மாவட்டத்தில் பரீட்சைகள் சுமுகமாக இடம்பெற்றன.

இதேபோன்று வவுனியா கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீழுவு உள்ளிட்ட வடக்கின் ஏனைய பகுதிகளிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

இதேவேளை கடந்த இரு தினங்களாக பரீட்சை மண்டபங்கள் தொற்று நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்ததுடன் கைச்சுத்தம் , உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: