நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!.
Wednesday, March 6th, 2024
எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்..
மேல் மாகாணத்தில் இந்த நவவீன வசதியுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை போக்குவரத்து சேவைக்கு உட்படுத்த் திட்டமிடப்பட்டுள்ளது..
அதன் முதற்கட்டமாக தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 பேருந்தகளை சேவையில் உட்படுத்துவதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து 2017 ஆம் ஆண்டுமுதல் பொது போக்குவரத்திற்காக இ-டிக்கெட் முறையை அறிமுகம் செய்ய முயற்சித்த போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை
ஆனால் இந்த இ-டிக்கெட் திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களத்தினால் நடத்தப்படும் பொது போக்குவரத்திற்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


