நவீன உற்பத்தித் துறையில் முன்னிலை வகிக்க நாம் தயார்- ஜனாதிபதி!

ஆசிய புரிந்துணர்வு கலந்துரையாடல் மாநாட்டின் முக்கிய தொனிப்பொருளான, தெற்காசிய பிராந்தியத்தின் விஞ்ஞான தொழில்நுட்பத்திலும், நவீன உற்பத்தித் துறையிலும் இலங்கை முன்னிலை வகிக்கத்தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொங் நகரில் ஆரம்பமான ஆசிய புரிந்துணர்வு கலந்துரையாடல் அரச தலைவர்கள் மாநாட்டின் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விஞ்ஞான தொழில்நுட்பத்திலும், நவீன உற்பத்தித் துறையிலும் அபிவிருத்தியை நோக்கி, பிராந்திய நாடுகளுக்கிடையில் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு பரிமாற்று செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை முன்வைத்தார்.
வளர்ச்சியடைந்து வரும் ஆசியா எதிர்வரும் சில வருடங்களில் உலகின் பொருளாதார மத்திய நிலையமாகவும் நிதி கேந்திரமாகவும் மேம்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வளர்ச்சி அடைந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடான இலங்கை, கூடுதல் வருமானம் பெறும் நாடாக மாற்றம் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது, விரைவான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பல்வேறு பாரிய செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த இலக்குகளை அடைவதற்கு பிராந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆசிய புரிந்துணர்வு கலந்துரையாடல் மாநாட்டில் பிராந்தியத்திற்குட்பட்ட நாடுகளில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு பெரும் வழிவகைகள் இருப்பதாக தனது உரையில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நிலைபெறா சமூக கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இதனை பயன்படுத்தமுடியும் என்றும் கூறியுள்ளார்.
Related posts:
|
|