நவாலித் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவுகூரல் இன்று !
Thursday, July 9th, 2020
நவாலித் தாக்குதலில் இறந்தவர்கள் ஞாபகார்த்தமாக அவர்களை நினைவு கூர்ந்து வடமாகாணம் முழுவதுமாக இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் ஒளித்தீபம் ஏற்றப்படவுள்ளது.
வலி. தென்மேற்கு உட்பட்ட நவாலி பொது அமைப்புக்கள், கல்லிமான்கள், குருமார்கள், மற்றும் நலன் விரும்பிகளின் கோரிக்கைக்கு அமைய அமைதியான முறையில் வீடுகளில் விளக்கேற்றி நினைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
1995 ஜுலை 9 இல் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட 147 பேரை நினைவு கூர்ந்தே ஒளித்தீபம் வீடுகளில் ஏற்றப்படவுள்ளது. மேலும் வழமைபோல் மாலை 4.30 மணிக்கு தேவாலயங்களில் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெறும்.
Related posts:
இம்மாத இறுதிக்குள் கொரோனா இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக...
கிளிநொச்சியில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!
கடதாசி தட்டுப்பாடு - மின் கட்டண பட்டியலை வழங்குவதில் பாதிப்பு என மின்சார சபையின் பாவனையாளர் இணைப்பு ...
|
|
|


