நவம்பர் மாதம் 13 இல் 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவிப்பு!

Tuesday, September 26th, 2023

2024 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு உரை நிகழ்த்தப்படவுள்ளது.

அத்துடன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன், 2024 பாதீட்டு தொடர்பான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 முதல் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வகுப்பறைகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை வரையறை செய்யுங்கள் - கல்வி அமைச்சு அறிவுறுத்து...
சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் - தேசிய நீர் வழங...
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு 17 வாக்குகளால் நிறைவேறியது ஆதரவாக 23 - எதிராக 06 வாக...

வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர...
நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் -...
தேசிய அடையாள அட்டையுடன் TIN-TAX இலக்கமும் வழங்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்...