நவம்பர் மாதம் ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு கிடைக்கும்?

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கைக்கு கிடைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்தித்து வரிச் சலுகை பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனங்களை மதிக்காது செயற்பட்ட காரணத்தினால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த வரிச் சலுகையின் ஊடாக 7500 பண்டங்களை ஏற்றுமதி செய்ய சந்தர்ப்பம் கிடைக்கின்றது.மீன் வகைகளை ஏற்றுமதி செய்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது.நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மீன்பிடி ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது. வெகு விரைவில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைச் திட்டம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|