நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் பேருந்து கட்டணங்கள் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
Thursday, August 4th, 2022
பேருந்து கட்டணங்கள் இன்று நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஒரு லீட்டர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டதன் பயனை பயணிகளான மக்களுக்கு வழங்குதற்காக பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிரேண்டா தெரிவித்துள்ளார்.
குறைக்கப்படும் பேருந்து கட்டணங்களின் விதம் தொடர்பில் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வடைந்ததன் பின்னனியில் சடுதியாக பேருந்து கட்டணங்கள் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படலாம் - சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்ப...
காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் ஆரம்பமானது விசாரணை!
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - அண்டை நாடுகளிலும் தாக்கம்!
|
|
|


