நல்லூர் மகோற்சவ காலத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது – அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு மாநகர சபை ஆணையாளர் அறிவிப்பு!
Wednesday, September 20th, 2023
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின்போது தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
மகோற்சவ திருவிழாக்களில் கலந்துகொண்ட பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப்பரிவர்த்தனை அட்டைகள், பணப்பைகள், மணிக்கூடு, தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள் முதலியன யாழ்ப்பாணம் மாநகர சபையின் உற்சவ காலப் பணிமனையில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மாநகர சபை அலுவலகத்தில் உள்ளன.
இவற்றின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகர சபையின் நிர்வாக கிளையில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மறு அறிவித்தல் வரை ருஹுணு பல்கலைக்கழகம் மூடப்பட்டது!
நாடு திரும்பியவர்களுக்கு விமான நிலைய சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம்...
இன்றும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது தபால் மூல வாக்களிப்பு!
|
|
|


