நாடு திரும்பியவர்களுக்கு விமான நிலைய சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம்!

Wednesday, July 1st, 2020

கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எ.சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமான இலங்கைக்கு வர முடியாமல் பல்வேறு நாடுகளில் இருந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சமீப காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறானோருக்கு விமான நிலையத்தில் உள்ள சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்த வகையில் இது வரையில் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

அப்போது இருந்த நிலைமையின் காரணமாக இவர்களுக்கு சுங்க தீர்வை அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தப்பம் கிடைக்கவில்லை என்று விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் யி.எ.சந்திரஸ்ரீ தெரிவித்திருந்தார்

நாளாந்தம் 100 பேர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகை தந்தவர்களுக்கு சுங்க தீர்வை அற்ற கட்டிட தொகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: