நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று 17 ஆம் திகதி காலை இடம்பெற்றது.
தைப்பூசத்தினத்துக்கு முதல்நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் செல்வார்கள் .
அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன .
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தப் புதிர் விழா 288 ஆவது ஆண்டாக இந்த வருடமும் கடைப்பிடிக்கப்பட்டது.
Related posts:
கோட்டாபய ராஜபக்ஷவின் மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு!
கொரோனா வைரஸ் தொற்று: அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!
சிரியாவில் ஏதிலிகள் பயணித்த படகு கவிழ்ந்து 77 பேர் உயிரிழப்பு!
|
|