நல்லூரில் விவரீதம்:  தீயினுள் வீழ்ந்த பெண் வைத்தியசாலையில்!

Saturday, August 12th, 2017

பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் முன்புறத்தில் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது – கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில்  குறித்த பெண் கற்பூரம் கொளுத்த முற்பட்ட போது அவர் தீக்குள் தவறி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது.காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts:

அனைத்து பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாணவர் அடையாளக் குறியீடு அறிமுக - கல்வ...
வங்காள விரிகுடாவில் வலுவடைகிறது தாழமுக்கம் - அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடையக் கூடி...
அதிபர் சேவையில் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கு குழு நியமனம் - கல்வி அமை...