நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிப்பவர்களை உடன் கைது செய்ய விசேட பொலிஸ் பிரிவு அமைப்பு!
Wednesday, November 23rd, 2016
மத மற்றும் இன நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று முன்தினம் அரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களைத் தூண்டி விடுபவர்களை விசாரணை செய்ய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் குறித்த பிரிவில் இருந்து விசாரணைகளை மேற்கொள்வர்.
மதம், இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் மக்களைத் தூண்டி விடுபவர்கள் பற்றி விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறானவர்களை தகுதி பகுபாடு இன்றி கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அன மற்றும் மத ரீதியில் மோதலை ஏற்படத்த அமைப்பு ரீதியில் குழுக்கள் முயற்சித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து இந்த விசேட பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

Related posts:
|
|
|


