நம் நாடு என்று பெருமையுடன் கூறும் ஒரு தலைமுறையின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது எமது பொறுப்பு – பிரதமர் மஹிந்த உறுதி!

Wednesday, July 28th, 2021

தமக்கு அண்மையிலுள்ள நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதை காண எமது மக்கள் விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள கிரதமர் மஹிந்த ராஜபக்ச அனைத்திற்கும் கொழும்பிற்கு செல்லாது அருகிலுள்ள நகரிலேயே தமது தேவைகளை நிறைவுசெய்து கொள்ள முடியுமாயின் சிறப்பாக இருக்கும் என மக்கள் எண்ணுவதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரே தடவையில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் ‘நூறு நகரங்கள் அபிவிருத்தி திட்டம்’ குருநாகல் ஹிரிபிட்டிய நகரில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

குறித்த தேசிய நிகழ்வில் இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துக் கொண்டு பிரதமர் மேலும் தெரிவிக்கையில் –

அனைவருக்கும் நிலையான நகரத்தின் வசதிகளை அனுபவிக்கக் கூடிய வகையில் முறையான நூறு நகரங்களை நாட்டு மக்களுக்கு உரித்தாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் காலம் காலமாக எவ்வித திட்டமிடலுமின்றி அபிவிருத்தி செய்யப்பட்டு வந்த நகரங்கள் ஊடாக மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் நாட்டின் பல நகரங்கள் சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. அத்துடன் இந்த நகரங்களை முறையாக பேணி வசதிகளை மேம்படுத்தி, கண்ணை கவரும் நகரங்களாக மாற்ற எத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படினும் அவை பயனற்று போனது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் நகரமொன்றின் பணியை ஆரம்பித்தவுடன் தேர்தல் இடம்பெற்று ஆட்சியில் இருந்தவர்கள் தோல்வியடைந்தவுடன் அப்பணி அத்துடன் இடைநிறுத்தப்படும். மேலும் சில திட்டங்கள் எந்நாளும் ஒரே நகருக்கு வரையறுக்கப்பட்டதாக விளங்கும். அதனால் தமது நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என்ற எண்ணம் மக்களிடையே இல்லாது போனது.

இன்று இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் நகரும் அது போன்றதொரு நகரம் ஆகும். இந்நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என எவ்வித நம்பிக்கையும் இருக்கவில்லை.

அதனால் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு வழிவகுத்தது மாத்திரமன்றி, முறையான வடிகாலமைப்புகள் அற்ற ஒழுங்கற்ற நகரங்களாக மாறின. சில இடங்களில் வடிகான்கள் நிறைந்து கிடப்பதை பார்ப்பதற்குக்கூட எவரும் இல்லை. அனைத்து இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்தக்கூட இடமில்லை.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்கள் தாமாக முன்வந்து வெற்று சுவர்களை ஓவியங்கள் வரைந்ததை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்த இளம் தலைமுறையினர் கிராமத்திலிருந்து தொடங்கி முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியாக விளங்க விரும்பினர். அன்றும் இன்றும் அதை நாம் பாராட்டினோம்.

இந்நிலையில் கொரோனா வந்து அவற்றை மட்டுப்படுத்தியபோது, சிலர் இளைஞர்களை நோக்கியும் ஏளனஞ்செய்தனர். இப்போது எங்கே வண்ணம் தீட்டுவதில்லையா? என்று கேட்டனர். நாங்கள் அவர்களை மறந்துவிட்டோம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

அவர்களின் தேவையை நாங்கள் கண்டோம். நம் நாடு என்று பெருமையுடன் கூறும் ஒரு தலைமுறையின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது நமது பொறுப்பு. இதை சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாககொள்கை திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தினோம். இன்று தொடங்கப்பட்டு வரும் இந்த நூறு நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் உங்களின் நம்பிக்கையை நாங்கள் பலப்படுத்துகிறோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

அத்துடன் இது வெறும் ஆரம்பம் மாத்திரமே. உங்களது கிராமத்திற்கு வரும்வரை இந்த வேலைத்திட்டத்தை நாம் செயற்படுத்துவோம்.

இதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மாத்திரமன்றி, உங்களது நகர சபை, பிரதேச சபை, நீர் வழங்கல் சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களதும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. அதற்கு உங்களது ஒத்துழைப்பும் கிடைப்பின் அது எமக்கு பெரும் பலமாகும்.

இத்திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்வதற்கே எதிர்பார்த்துள்ளோம். இதற்கு நகர்ப்புற கட்டட வடிவமைப்பாளர்கள், புவியியலாளர்கள், வாஸ்து நிபுணர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வோம். எனவே, இந்த 100 நகரங்களையும் ஒரு முறையான நகரத் திட்டத்திற்குள் உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நகரங்களை அபிவிருத்தி செய்து தொடர்ந்து அவற்றை பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். நகரங்களை மக்களிடம் ஒப்படைத்த பின்னர் அவற்றை அழகாக வைத்திருப்பது உங்கள் அனைவரின் பொறுப்பாகும். அதற்கு எங்களுக்கு அரசதுறை மற்றும் தனியார் துறையின் ஆதரவு தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: