நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை நிறைவேறாது – அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!
 Monday, May 2nd, 2022
        
                    Monday, May 2nd, 2022
            
எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்க தயார் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர் – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்க ஆளும் தரப்பு தயாராகவே இருக்கின்றோம்,
இதேநேரம் எதிர்க்கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை நிறைவேறாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்..
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை மறுதினம் புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உயர்தர பரீட்சை நவம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெ...
இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குங்கள் ...
ரூபாவின் பெறுமதி கடந்த வார இறுதியில் 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளது - மத்திய வங்கி தெரிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        