நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதியும் இலங்கைக்கு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Thursday, October 28th, 2021
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த தொகுதி இன்று வியாழக்கிழமை நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எனவும் விவசாய அமைச்சின் செயலாளர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், ஏதேனும் அவசர நிலை ஏற்படுமாயின் விவசாயிகளுக்கு பொருத்தமான கிருமிநாசினியை வழங்குவதற்கு அறிவியல் ரீதியில் ஆராய்வது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கின் முதல்வர், பேரவைத் தலைவருக்கு ஆளுநர் அவசர கடிதம்!
மேலும் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள்!
பாடசாலைகளில் தொடர்ச்சியாக நீர் விரயமாவதைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை - சுற்றறிக்கையை வெளியிட கல்...
|
|
|


