நட்பு நாடாக இருந்தாலும் தரம் குறைவான சீன உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது – அரசாங்கம் தெரிவிப்பு!

நட்பு நாடு என்பதற்காக தரம் குறைவான உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது என்பதை சீன அரசாங்கத்திற்கு தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்..
சீன இரசாயன கப்பல் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறித்து இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் தரத்தில் குறைவான குறித்த இரசாயன உரத்தைக் கொண்ட கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பது தடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரலாற்று ரீதியில் இலங்கை – சீனா நட்பு நாடுகளாக இருந்தாலும் தரக்குறைவான பொருட்களை அங்கிருந்து இறக்குமதி செய்ய முடியாது எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|