நட்புறவை முன்னெடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நோக்கம்!
Saturday, January 4th, 2020
இந்தியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுடன் நட்புறவுடனும் சர்வதேச அரசியல் ரீதியிலும் தொடர்புகளை முன்னெடுத்து நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கையை மேற்கொள்வதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச சொத்துக்களை வெளிநாட்டுக்கு வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு இலங்கையில் காணி வழங்குவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்ரண தெரிவிக்கையில் இந்த ஒப்பந்தம் குத்தகை அடிப்படையிலானது. முன்னைய அரசாங்க காலப்பகுதியிலேயே இது மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.
Related posts:
|
|
|


