நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் இழுவை மடி தடைச்சட்டம் – மீனவ சங்கம்!
Wednesday, January 17th, 2018
கடந்த வருடம் பாராளுமன்றில் இழுவை மடித் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோதிலும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினா் தெரிவித்துள்ளனர்.
சரியான முறையில் இச்சட்டம் அமுல்ப்படுத்தப்படாததால் தொடர்ச்சியாக இழுவை மடித்தொழிலை உள்ளூர் மீனவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் கடல் வளம் அழிக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மீனவ சமாசங்களின் பிரதிநிதிகள் யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டதுடன் இச்சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Related posts:
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- கட்டுப்படுத்துவதற்கான விஷேட செயலணி சுகாதார அமைச்சர் தலைமையில்...
வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!
எம்.சீ.சீ உடன்படிக்கை விவகாரம் - கமத் தொழிலாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
|
|
|


