நடைபாதைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை!
Tuesday, December 18th, 2018
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிரதான வீதிகள் மற்றும் நடைபாதைகளில் மக்களுக்கு தடை ஏற்படும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை பொலிஸாரால் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு வாகனங்கள் நிறுத்தி வைப்பதால், தேவையற்ற விதத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவும் வாகனங்களை அப்புறப்படுத்த தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த நடவடிக்கை நாடுபூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களால் முன்னெடுக்கப்படுமென்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
எரிபொருள் விலை குறித்து புதிய தகவல்!
குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை காட்டிக் கொடுத்தது. - நாடாளுமன...
கால்நடைகளின் மருந்துகளின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேலைத்திட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீ...
|
|
|


