நடுக்கடலில் விபத்துக்குள்ளான இந்தியக் கப்பல் – காப்பாற்றியது இலங்கை கடற்படை!

நடுக்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த 07 இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பலில் இருந்த 07 பேரே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய சரக்குக் கப்பல் காலியில் இருந்து சுமார் 65 கடல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியிருந்ததாக கடற்படைப் பேச்சாளர் கூறினார். இதனையடுத்து இன்று காலை கடற்படைக்கு சொந்தமான விரைவு தாக்குதல் படகு மூலம், அந்தக் கப்பலில் இருந்த பணியாளர்கள் 07 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட 07 இந்தியர்களும் தற்போது காலி கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார். காப்பாற்றப்பட்ட 07 இந்தியர்களையும் இந்திய தூதுவராலயத்தில் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
Related posts:
பிரதமர் ரணில் சீனா பயணம்!
இலங்கையில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் - மின்சார நுகர்வோர் சங்கத்தி...
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இ...
|
|