நடப்பு ஆண்டில ரயில் விபத்துக்களினால் 169 பேர் பலி!

இந்த ஆண்டில் இதுவரையில் ரயில் விபத்துச் சம்பவங்களில் 180 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட புகையிரத பாதுகாப்பு அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகளில் வாகனங்களை போட்டதன் காரணமாகவே அதிகளவான விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ரயில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளல், செல்பீ எடுத்தல், செல்லிடப்பேசியில் பேசுதல், ரயில் மிதி பலகையில் பயணித்தல், ரயில் ஏறும் போது தவறி விழுதல் போன்ற விபத்துக்களினால் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 169 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மொத்தமாக 540 பேர் உயிரிழந்தனர் என அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜெர்மனியின் அதிநவீன பேருந்து இலங்கையிலும் !
பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு !
நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவ தீர்மானம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|