தோழர் திலக் அவர்களின் துணைவியாரின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Monday, May 6th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் கட்சியின் சர்வதேச உதவி அமைப்பாளரும் கட்சியின் சுவிஸ் பிராந்திய அமைப்பாளருமான தோழர் திலக் அவர்களின் அன்பு மனைவி அமரர் திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்களின் புகழுடல் தோழர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்களின் இறுதி அஞ்சலி மரியாதையுடன் தீயினில் சங்கமமாகியது.

ஈழ விடுதலை போராட்டத்தின் மூத்த பெண் போராளியான அமரர் லிங்கேஸ்வரி கடந்த 30 ஆம் திகதி உடல் நலக்குறைவு காரணமாக சுவிஸ்சர்லாந்தின் சூரிச் நகரில் காலமானார்.

அன்னாரது பூதவுடல் சுவிஸ்சர்லாந்தின் kaferholzstrasse 101,8046 zurich Switzerland மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தலைமையில் நடைபெற்ற அன்னாரது இறுதிக் கிரியை நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பில் தோழர் தயானந்தா கலந்து கொண்டு கட்சிக் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா மற்றும் சர்வதேச பிராந்தியங்களின் அமைப்பாளர்கள் தோழர்கள், நண்பர்கள் மற்றும் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் ரஞ்சன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுகுதோழர் ) சார்பில் நியூட்டன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு அமரரின் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: