தோழர் தவநாதனின் தாயார் காலமானார்!
Sunday, January 9th, 2022
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாசபையின் முன்னாள் உறுப்பினருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன் பார்வதிப்பிள்ளை இன்றையதினம் (08.01.2022) காலமானார்.
அன்னாரின் மறைவு குறித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை செலுத்துவதுடன் அவரது பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினரது துயரில் தாமும் பங்கெடுத்துக் கொள்கின்றது.
கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் வைரவநாதன் பார்வதிப்பிள்ளை வயது மூப்பின் காரணமாக இன்றையதினம் காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
000
Related posts:
பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கம்!
உள்ளூர் தொளிலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் - யாழ்.மாநகரசபை அமர்வில் றீகன் வலியுறுத்து!
இலங்கைக்கு வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ!
|
|
|


